×

சட்டப்பேரவையில் அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் டிஸ்மிஸ்: முதல்வர் கெலாட் நடவடிக்கை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசை விமர்சனம் செய்த அமைச்சர் ராஜேந்திர குதாவை அமைச்சரவையில் இருந்து முதல்வர் கெலாட் டிஸ்மிஸ் செய்தார். ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றவர் ராஜேந்திர குதா. இவர் ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். நேற்று சட்டப்பேரவையில் அவர் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினார்.

அவர் பேசும் போது,’ ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு தவறிவிட்டது. இதனால் ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. மணிப்பூர் பிரச்சினையை எழுப்புவதற்கு பதிலாக, நம்மை நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும்’ என்றார். அமைச்சரின் இந்த பேச்சு ராஜஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுததியது. இதையடுத்து அவரை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்து முதல்வர் அசோக் கெலாட் நடவடிக்கை எடுத்தார்.

The post சட்டப்பேரவையில் அரசை விமர்சித்த ராஜஸ்தான் அமைச்சர் டிஸ்மிஸ்: முதல்வர் கெலாட் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Minister ,Chief Minister ,Jaipur ,Khelat ,Rajendra Guda ,Rajasthan government ,Rajasthan… ,CM ,Gehlot ,Dinakaran ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...